உலகில் நடக்கப் போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறி புகழ்பெற்றவர் தான் பாபா வங்கா. 2026 ஆம் ஆண்டு பற்றி இவருடைய கணிப்புகள் வெளியாகி உள்ளது. உலகில் ஏராளமான தீர்க்கதரசிகள் இருந்தாலும் அவர்களில் மிகவும் புகழ் பெற்றவர் பாபா வங்கா தான். பல்கேரியாவை சேர்ந்த இவர் தன்னுடைய அதிசயமான கணிப்புகளால் உலக அளவில் புகழ்பெற்றவர். இவர் 12 வயதில் பார்வை இழந்ததற்கு பிறகு எதிர்காலத்தை பார்க்கும் ஒரு வலிமையான சக்தி அவருக்கு கிடைத்தது.
அதன் பிறகு அவரால் கணிக்கப்பட்ட பல விஷயங்கள் அதுவும் 100 வருடங்களுக்கு முன்பு கணிக்கப்பட்ட விஷயங்கள் தற்போது இந்த நூற்றாண்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டில் நடைபெற இருப்பதை அவர் கணித்துள்ளார். இது தற்போது மக்களிடையே பரபரப்பு கிளப்பியுள்ளது. செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பம் 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது உலக அளவில் AI இல்லாத துறையே கிடையாது.
பாபா வங்கா கணித்துள்ள 2026 இல் AI மூலமாக மனித உறவுகளுக்கு பிளவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மனிதர்களின் வாழ்க்கையையும் கூட ஆதிக்கம் செலுத்த தொடங்கும் அளவுக்கு AI வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வாங்கக்கூடிய தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்ப்பாராத அளவு உயரும் என கனித்துள்ளார். கடந்த ஆண்டு பல உலக நாடுகளுக்குள் இன கலவரங்கள் மற்றும் போர் நடக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் அப்படியே நடந்தது. அதேபோல 2026 ஆம் ஆண்டிலும் ஒரு பெரிய உலகப் போர் தொடங்கும் என்று கணித்துள்ளார்.
அந்தப் போரில் முக்கிய வல்லரசு நாடுகள் ஈடுபடும் எனவும் உலகெங்கும் உள்ள கண்டங்களில் இந்த போர் பதற்றம் பரவும் எனவும் கனித்துள்ளார். இப்படி நடக்கும் பட்சத்தில் பொருளாதாரப் பிரச்சினை, கரன்சி மதிப்பு சரிவு, வங்கிகள் திவால், நிதி நெருக்கடி மற்றும் பண வீக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரிக்கும். 2026 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவுகள், பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் என தீவிர வானிலை நிகழ்வுகளும் ஏற்படும் எனவும் இந்த பேரழிவால் ஏழு முதல் எட்டு சதவீதம் நிலப்பரப்பு பாதிக்கப்படும் எனவும் கணித்துள்ளார்.
இந்த காலநிலை மாற்றத்தால் வரலாறு காணாத வெள்ளம், தீவிர வறட்சி வானிலை ஏற்படும் என்றும் இதனால் பூமியில் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுச்சூழல் அமைப்பை மாற்றும் எனவும் கணித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு பெரிய விண்வெளி கப்பல் பூமியை நோக்கி வரும் எனவும் இதன் மூலம் மனிதர்கள் வேறொரு உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வார்கள், மனிதர்களுடன் வேற்றுக்கிரகவாசிகள் பேசுவார்கள் என்று பாபா வாங்கா கணித்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
