தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணியின் பாமகவும் நேற்று இணைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று இரவில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். டெல்லி சென்ற இபிஎஸ் நேற்று இரவு 10 மணிக்கு அமித்ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டுமென அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியை 10 நாட்களுக்குள் இறுதிச் செய்யவும் அவர் இபிஎஸ் இடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் வரும் நாட்களில் அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றம் நிகழலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன.
