“அண்ணன் செத்துட்டா மொத்த பணமும் நமக்கு தான்”… கணவரோடு சேர்ந்து தங்கை போட்ட சதித்திட்டம் … சினிமாவையே மிஞ்சும் பயங்கர சம்பவம்…!

By Nanthini on ஐப்பசி 12, 2025

Spread the love

விபத்து காப்பீடு தொகை 4 லட்சத்தை அபகரிக்க மனைவியின் சகோதரனை கொலை செய்த மைத்துனரை போலீசார் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு மணிகண்டனின் தாய் விபத்தில் உயிரிழந்த நிலையில் விபத்து காப்பீடு செய்து இருந்ததால் காப்பீட்டுத் தொகை 12 லட்சம் ரூபாய் வந்துள்ளது. இதில் மணிகண்டன் மற்றும் அவருடைய சகோதரிகள் இரண்டு பேர் என மூன்று பேருக்கும் தலா நான்கு லட்சம் ரூபாய் பிரித்து வழங்கப்பட்டது. மணிகண்டன் அவருக்கு வந்த பணத்தை தங்கை அஞ்சுவின் கணக்குக்கு அனுப்பி அந்த பணத்தை பிறகு வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். அதனால் தங்கை மொத்தம் 8 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றார். அந்த மொத்த பணத்தையும், கணவருடன் சேர்ந்து அவர் ஆடம்பரமாக செலவு செய்துள்ளார்.

இந்த பணத்தை கேட்டால் மணிகண்டனை தீர்த்து கட்டவும் திட்டம் தீட்டினர். சம்பவத்தன்று கணவன் மனைவி சண்டை போடுவது போல நடித்து மனைவி அஞ்சுவை வீட்டு அறையில் வைத்து கணவர் அஜித் குமார் பூட்டியுள்ளார். இதனை அறிந்த மணிகண்டன் தன்னுடைய தங்கையை பூட்டி வைத்தது ஏன் என்று மைத்துணரிடம் சண்டை போட்டுள்ளார். இதனிடையே அவர்கள் திட்டமிட்டபடி அஜித்குமார் மணிகண்டனின் இடுப்பு, முதுகு மற்றும் தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

   

மணிகண்டன் படுகாயம் அடைந்த நிலையில் தங்கை அஞ்சு அவருடைய கணவர் மாட்டிக்கொள்வார் என்ற பயத்தில் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. ஆனால் இது பற்றி விவரம் அறிந்ததும் மணிகண்டனின் மற்றொரு சகோதரி தீபா உடனே போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அஜித்குமார் மற்றும் அஞ்சு இருவரும் தலைமறைவான நிலையில் தற்போது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.