தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரம் பகுதியை சேர்ந்த உதயகுமாரின் மகன் சோலையப்பன். இவர் படித்து முடித்து விட்ட வேலைக்கு எதுவும் செல்லாமல் தன் நண்பர்களுடன் சுற்றி தெரிந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவருடைய மகன் செல்வகுமார் தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு சாலையில் சாலையோர பழக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு செல்வகுமாரின் தாயார் தெருவில் நின்று கொண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவங்க குடும்பத்துல எவ்வளவு கஷ்டப்படுறாங்க இவன் ஒரு வேலைக்கு கூட போகாம இப்படி ஊர் சுத்திட்டு இருக்கான் என சோலையப்பனை பற்றி பேசியுள்ளனர்.
இதனை அருகே இருந்து கேட்ட சோலையப்பன், செல்வகுமாரின் தாயாருடன் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமாரின் தாய் சோலையப்பன் தகராறு செய்தது தொடர்பாக தன் மகனுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் தனது தாயை தகாத வார்த்தைகளால் பேசியதை கேட்டு ஆத்திரமடைந்த செல்வகுமார் உடனே வீட்டுக்கு வந்து அங்கிருந்து கத்தியை எடுத்தபடி சோலையப்பன் வீட்டுக்கு சென்று என் அம்மாவை எதற்கு மரியாதை இல்லாமல் பேசின என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த செல்வகுமார் சோலையப்பனை கத்தியால் இதய பகுதி அருகே குத்தினார்.
இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சோலையப்பனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் செல்வகுமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தாயை திட்டிய ஆத்திரத்தில் வாலிபரை பழக்கடை வியாபாரி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
