தமிழகத்தில் ஒரு மாதத்திற்குள் டிஆர்பி மூலமாக 2,200 நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதை தொடர்பாக இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 34 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. நான் பொறுப்பேற்ற எட்டு மாதத்திற்குள் 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 8 புதிய பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான 2700 பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர இன்னும் ஒரு மாதத்திற்குள் டிஆர்பி தேர்வு மூலமாக 2200 நிரந்தர பேராசிரியர்களை பணியில் அமர்த்துவோம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
