மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முக மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தகுதியான பயனர்களுக்கு தீபாவளியையொட்டி இம்மாதம் பணம் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இதுகுறித்து அரசு தரப்பில் விசாரித்தால், இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால், தீபாவளிக்கு பணம் கிடைக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
