குஷியோ குஷி..! ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு…. அரசு போட்ட முக்கிய உத்தரவு..!!

By Soundarya on ஐப்பசி 12, 2025

Spread the love

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு 10 கிலோ அரிசியும், சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசியும் வழங்கப்படுகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில்  ரேஷன் கார்டுதாரர்களுக்கு 570 மதிப்பிலான தீபாவளி மளிகை தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர்  ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அதனை மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியானாது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த மாதத்திற்கான ரேஷன் பொருள்களை தீபாவளி தொகுப்பை முன்னதாகவே மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தீபாவளி பரிசாக முதியோருக்கு வேட்டி, சேலை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.