தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக , நாதக, தவெக என இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதற்கிடையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கூட்டணி பற்றி பேச திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று எடப்பாடி விமர்சித்துள்ளார். TTV தினகரனின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அமமுக எல்லாம் ஒரு கட்சியா ? என சாடியுள்ளார். மேலும் தனது பரப்புரையில் பங்கேற்கும் தவெக வினரிடம், கட்சி தலைமையின் அனுமதி பெற்று வருமாறு கூறினோம். இருப்பினும் அவர்களே தன்னார்வமாக வந்து பங்கேற்கின்றனர். இதை எதிர்க்கட்சிகளால் பொறுக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்.
