நான் செத்துப் போயிட்டேன்னு சொன்னாங்க… நான் இப்போ பண்ணிருக்கிறது 5 வது கல்யாணம்னு…. மனம் திறந்த சிறுத்தை சிவா தம்பி நடிகர் பாலா…

By admin on மாசி 8, 2025

Spread the love

நடிகர் பாலா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் ஆவார். இவரது சகோதரர் சிறுத்தை சிவா பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது குடும்பமே திரைத்துறையை சார்ந்தது தான். இவரது தாத்தா ஏகே வேலன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலம் ஸ்டுடியோ என்பதை வைத்திருந்தார். இவரது தந்தை ஜெயக்குமார் ஒரு ஆவண புகைப்பட கலைஞர் மற்றும் குறும்பட இயக்குனராக 400 க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார். அதன் மூலம் அவருக்கு சினிமாவிற்குள் நுழைவது எளிதாக ஒன்றாக இருந்தது.

   

ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானார். தமிழில் 2003 ஆம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், மஞ்சள் வெயில் போன்ற திரைப்படங்களில் நடித்தார் பாலா.

   

அதற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் அவரது தம்பியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பாலா. அதை தொடர்ந்து தம்பி, அண்ணாத்த போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் புலி முருகன், லூசிபர் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலமும் புகழ்பெற்றவர் பாலா.

 

தனது தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருபவர் பாலா. முதலில் ஒரு திருமணம் செய்து அவரை பிரித்து இரண்டாவது ஒரு மருத்துவரை திருமணம் செய்து மறுபடியும் பிரிந்து வாழ்ந்தார் பாலா. சமீபத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார் பாலா. தற்போது ஒரு நேர்காணலில் தனது மனைவியோடு கலந்து கொள்ளும்போது தன் வாழ்க்கை பற்றிய ஒரு சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

பாலா கூறியது என்னவென்றால் இந்த மீடியாக்காரங்க என்ன வேணாலும் எழுதுறாங்க. எப்போ நடந்துருக்க என்னோட கல்யாணம் அஞ்சாவது கல்யாணம் அப்படின்னு சொல்லி எழுதி இருக்காங்க. அது மட்டும் இல்லாம நான் போன வருஷம் ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருந்த அப்போ வந்து வென்டிலேட்டர் எல்லாம் வச்சிருந்தாங்க. அப்போ நான் செத்துட்டேன்னு நியூஸ் எல்லாமே வந்துடுச்சு. கடைசி நேரத்துல ஒரு அதிசயம் நடந்தது. அந்த அதிசயதினால தான் நான் மீண்டும் உயிர் பிழைச்சு வந்தேன். அதேபோல தான் இப்போ நடந்திருக்க கல்யாணமும் என் வாழ்க்கையில் எனக்கு கிடைச்ச ஒரு பொக்கிஷம் தான். இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் பாலா.