நிறைமாத வயற்றுடன் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ..!

By Nanthini on மாசி 8, 2025

Spread the love

இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி நடிகராக அறிமுகமானவர்தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. பாப் கட்டிங் செம்பட்டை முடியுடன் சராசரி உயரத்துக்கும் குறைவான உயரம் கொண்ட மனிதராக மாமு வேற மாதிரி ஆகிடும் என்று சவுண்டு விட்டபடி நடித்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்திலும் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடித்து அசத்து இருந்தார். தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர்  சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் காமெடி பீசாக பலரால் பார்த்து ரசிக்கப்படும் இவர் உண்மையில் மிகப் பெரிய கோடீஸ்வரர்.

மனைவி சங்கீதா கர்ப்பம்.. 47 வயதில் அப்பாவாகும் ரெடின் கிங்ஸ்லி.. -  விடுப்பு.கொம்

   

தமிழக அரசு நடத்தக்கூடிய பொருட்காட்சிகளை விட அதிக பொருட்காட்சிகளை நடத்தி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார். பொருட்காட்சி ஒப்பந்ததாரரான இவருக்கு கீழ் 300-க்கும் மேற்பட்டோர் பணி செய்கின்றனர் என்றால் பலராலும் இதனை நம்ப முடியாது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பொருட்காட்சிகளை நடத்தி வருகின்றார். இவர் சினிமாவில் நடித்த சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லாத நிலையிலும் ஆசை காரணமாக சினிமாவில் நடிக்கின்றார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் யாருமே வைத்திருக்காத மிக உயர்தர சொகுசு காரை இவர் மட்டுமே வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் சுமார் 15 வருடமாக இந்த பிசினஸ் செய்து வருகின்றார்.

   

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சங்கீதா.. 47 வயதில் அப்பாவாகும் ரெடின்..  குவியும் வாழ்த்து | Actor Redin Kingsley and Wife Sangeetha Announce  Pregnancy News, Fans and ...

 

சினிமாவில் பார்ப்பதற்கு மட்டும் தான் காமெடி பீஸ். ஆனால் நிஜத்தில் இவர் பெரிய தொழிலதிபர். இப்படியான நிலையில் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் தன் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரெடின் கிங்ஸ்லி வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படியான நிலையில் சங்கீதா நிறைமாத வயிற்றுடன் இருக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Archana Saravanan பதிவைப் பகிர்ந்துள்ளார் (@archana_makeover_hair)