Connect with us

எத்தனையோ சீரியல் நடிச்சிருக்கேன்… ஆனா சிறகடிக்க ஆசை சீரியல் மட்டும் தான் இப்படி… Open-ஆ சொன்ன மீனா…!!

CINEMA

எத்தனையோ சீரியல் நடிச்சிருக்கேன்… ஆனா சிறகடிக்க ஆசை சீரியல் மட்டும் தான் இப்படி… Open-ஆ சொன்ன மீனா…!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. சிறகடிக்க ஆசை சீரியலைப் போன்றே அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இந்த சீரியல் பிரபலமாக இருக்கிறது.

இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்கள் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோகினி எப்போது மாட்டுவார் எல்லா பிரச்சனையிலும் டைரக்டர் ரோகினியை காப்பாற்றிக் கொண்டு செல்கிறார்.

எப்போது உண்மைகள் தெரிய வரும் என தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு ஈடுபாடுடன் சிறகடிக்க ஆசை சீரியலை ரசிகர்கள் காண்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா நேர்காணல் ஒன்றில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

   

அப்போது அவர் இதுவரை எத்தனையோ சீரியல்களில் தான் நடித்திருப்பதாகவும் பல சீரியல்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்களை வைத்தே கதை போகும். 

 

சிறகடிக்க ஆசை சீரியலில் தான் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதனால் தான் என்னவோ இந்த சீரியலுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது.

author avatar
indhuramesh
Continue Reading
To Top