எத்தனை பேர படிக்க வச்சாங்க… அப்பாவோட Death-க்கு கூட வரல… ஆதங்கத்தை பகிர்ந்த குமரி முத்து மகள்…!!

By indhuramesh on ஜூன் 2, 2024

Spread the love

நாடக நடிகராக வாழ்க்கையை தொடங்கி திரையுலகில் அறிமுகமாகிய பிரபலமான பல நடிகர்களுக்கு உண்டு அவர்களை போன்று தான் நடிகர் குமரி முத்து. நாடக நடிகராக இருந்த இவர் 1980 ஆம் ஆண்டு வெளியான காளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரை உலகில் அறிமுகமானார்.

சுமார் 30 வருட காலம் திரையுலகில் பயணித்த குமரிமுத்து தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் மொழி என சுமார் ஆயிரம் படங்களில் நடித்திருப்பார். அவரையும் அவரது தனித்துவமான சிரிப்பையும் ரசிகர்கள் மறக்க முடியாது.

   

சமீபத்தில் குமரிமுத்துவின் மகள் எலிசபெத் தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அப்போது அவர் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். தந்தையின் திரை வாழ்க்கை பற்றியும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பகிர்ந்த அவர் தனது மனதில் இருந்த வேதனை ஒன்றையும் கூறியுள்ளார். 

   

அதாவது குமரிமுத்து அவர்கள் தனது மனைவி பெயரில் ஆரம்பித்த புண்ணியம் டிரஸ்ட் மூலமாக ஏராளமானோருக்கு உதவி செய்ததாகவும் எத்தனையோ பேரை பெரிய பெரிய படிப்புகள் படிக்க வைத்ததாகவும் கூறினார்.

 

ஆனால் இப்படி குமரிமுத்துவால் உதவி பெற்றவர்கள் யாரும் அவரது இறுதி சடங்கிற்கு கூட வரவில்லை என்பது தான் அவரது குடும்பத்தின் மனவருத்தம் என வேதனையை பகிர்ந்துள்ளார்.