Connect with us

விஜய்க்கு NO.. அஜித்துக்கு OK சொன்ன சென்சேஷனல் நடிகை.. அதுக்கு இப்படி ஒரு காரணமா..?

TRENDING

விஜய்க்கு NO.. அஜித்துக்கு OK சொன்ன சென்சேஷனல் நடிகை.. அதுக்கு இப்படி ஒரு காரணமா..?

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீ லீலா மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தளபதி விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலுக்கு விஜயுடன் இணைந்து நடனமாட ஸ்ரீ லீலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமிழில் முதல் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதை விரும்பவில்லை. இதனால் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது.

   

 

விஜயுடன் இணைந்து டான்ஸ் ஆடினால் அந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். ஆனால் தனது எதிர்காலத்தை நினைத்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடும் வாய்ப்பை ஸ்ரீலீலா நிராகரித்து விட்டார். இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Actress Sreeleela Set To Be Replaced From Vijay Devarakonda's Next? What We  Know | விஜய் தேவரகொண்டா படத்தில் இருந்து விலகுகிறாரா ஸ்ரீ லீலா?

ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வில்லையாம். படத்தில் இடம் பெறும் வேறு ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துடன் இணையும் ஸ்ரீ லீலா, திரைச்செய்தி - தமிழ் முரசு Cinema/Movie news  in Tamil, Tamil Murasu

author avatar
Priya Ram
Continue Reading
To Top