சூரியின் ‘கருடன்’ படம் அந்தப் படத்தோட காப்பியா..? கடைசியில மண்டை மேல இருந்து கொண்டைய மறந்துட்டீங்களே..!

By Mahalakshmi on ஜூன் 2, 2024

Spread the love

சூரியின் நடிப்பில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் கருடன். இந்த திரைப்படம் கன்னட மொழி படத்தின் ரீமேக் என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் ஒருவராக வளம் வந்தவர் நடிகர் சூரி, தற்போது ஹீரோவாக கலக்கி வருகின்றார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பல பிரபலங்கள் பின்னர் ஹீரோவாகி விடுகிறார்கள்.

   

எடுத்துக்காட்டாக பலரை கூறலாம் சந்தானம், யோகி பாபு அவர்கள் வரிசையில் தற்போது சூரியும் இணைந்து இருக்கின்றார். மதுரையை சேர்ந்த இவர் சென்னைக்கு சினிமா கணவோடு வந்தார். பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு சுசீந்திர இயக்கத்தில் உருவான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

   

அதை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா என பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தில் இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

 

தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வருகின்றது. இந்நிலையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் என்கின்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கின்றார். இப்படம் தமிழகம் எங்கும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றது . இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி, சசிகுமார், உண்ணி முகுந்தன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் 20 கோடி வரை ஷேர் எடுக்கும் என்று கூறுகிறார்கள். அதாவது 50 லிருந்து 60 கோடி வரை வசூல் செய்யும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கருடன் திரைப்படம் கன்னிடத்தில் வெளியான கருட காமன விருஷ்ப வாஹனா என்ற திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகின்றது.

காந்தாரா படத்தின் ஹீரோவான ரிசப் செட்டி நடித்திருக்கும் இந்த திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள்தான் ஆகின்றது. அந்தக் கதையின் உரிமையை வாங்கிக் கொண்டு தற்போது தமிழில் இதனை பட்டி டிங்கரிங் பார்த்து படத்தை எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் கன்னட ரீமேக்கில் வைக்கப்பட்டிருந்த அதே கருடன் என்கின்ற படத்தின் பெயரையும் இதில் வைத்திருக்கிறார்கள்.