விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒவ்வொரு நாளும் புது கதை களத்துடன் இந்த சீரியல் பரபரப்பாகவும் ,விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. முத்து மற்றும் மீனாவின் ரொமான்ஸ் காட்சிகளுக்காவே இந்த சீரியலை பலர் விரும்பி பார்த்து வருகின்றனர்.
தற்பொழுது இந்த சீரியலில் வீட்டிற்கு சொல்லாமல் ரவி ஸ்ருதியை திருமணம் முடித்துக் கொண்டார். ஆனால் கோவிலில் மீனாவும் உள்ளார். மீனாவுக்கு தெரியாமல் இத்திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் மீனா சுருதி மற்றும் ரவியை திட்டுகிறார். மாமாவிடம் ஆவது சொல்லி இருக்கலாமே எனக் கூறுகிறார்.
ஐயர் வந்து சாட்சி கையெழுத்து கேட்க, கையெழுத்து போட்டு தனக்கு தானே ஆப்பும் வைத்துக் கொள்கிறார் மீனா. இதன்மூலம் மீனாவுக்கும் , முத்துவுக்கும் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிய போவது மட்டும் உறுதி என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ருதியின் அப்பா மகளை காணவில்லை என போலீசை ரவியின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
ஸ்ருதியோ புத்திசாலித்தனமாக வீட்டுக்கு போனா மாட்டிப்போம் எனக்கூறி friend guest house கு போயிடலாம்னு ரவியை அழைத்துச் செல்கிறார். ரவி ஸ்ருதி செய்த திருமணத்தில் இறுதியாக மாட்டிக்கொண்டு முழிக்க போவது மீனா தான். அண்ணாமலையை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர். இவ்வாறு இன்றைய நாளின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த ப்ரோமோ…
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் கடும் நெருக்கடிக்குப் பிறகு ஒருவழியாக (U/A) சான்றிதழ் பெற்றுள்ளது. படத்தில்…
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளதால், தற்போது வங்கிகளில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.20 சதவீதமாகக்…
கோவையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார், நடிகர் விஜய் மற்றும் அவரது திரைப்பட வெளியீட்டில் நிலவும் சிக்கல்கள் குறித்து…
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, தனது வாடிக்கையாளர்கள் பெயர் மற்றும் பாலின மாற்றங்களைச் செய்வதற்குத் திருநங்கைகளுக்கான தேசிய…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சிப்…
சென்னையைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 10 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.…