ரோகினி பையனால் வந்த புது பிரச்சனை.. மகனுக்காக ரூம்பை விட்டுக் கொடுத்த கல்யாணி.. கடும் கோபத்தில் விஜயா..!

By Mahalakshmi on மே 30, 2024

Spread the love

விஜய் டிவி மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. ரோகிணி உண்மையில் பணக்காரப் பொண்ணுதான் என்று நினைப்பில் விஜயா ஓவராக ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க மனோஜ் ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கின்றார். பெரிய தொழிலதிபராக மாறிவிடலாம் என கனவு கண்டு வருகின்றார்.

   

மீனாவுக்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்தும் விஜயா மனசாட்சியே இல்லாமல் மீனாவே குறை சொல்லி வருகிறார். இதையெல்லாம் பார்த்த ரோகிணி மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றார். இப்படி இருவரும் ரூமுக்காக தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

   

 

இதற்கு இடையே மூன்றாவது மருமகள் ஸ்ருதி மீனாவுக்கு ஆதரவாக விஜயாவிடம் போய் சண்டை போடுகிறார். நான் மீனாவை பற்றி பேசவில்லை என்று விஜயா கூறிய போதும் நீங்கள் அவரைப் பற்றிதான் பேசுகிறீர்கள் என்று கூறி சண்டையிட்டு செல்கிறார். இதனை தொடர்ந்து மீனா சோர்வாக இருப்பதால் காலையில் யாருக்கும் சமைக்க முடியாமல் போய் விடுகின்றது. அதற்கும் மீனதான் காரணம் என்று விஜயா திட்டிக் கொண்டே இருக்கின்றார்.

மேலும் முத்து இனி யாருக்கும் மீனா சமைக்க மாட்டாள். உங்களுக்கு மட்டும் தான் சமைப்பால் என்று அவரது அப்பாவிடம் கூறி விடுகின்றார். இப்படி மீனாவுக்கு உடமுக்கு முடியாமல் இருப்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு ரோகிணியின் மகன் கிர்ஷுக்கு கண்ணில் ஆப்ரேஷன் செய்து இருக்கிறார்கள். இதை பார்த்த மீனா அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

இங்கு இரண்டு நாட்கள் இருப்பார்கள் என்று கூற விஜயா சண்டைக்கு வருகிறார். இங்கு ரூம் எது இருக்கின்றது என்று கூறிய உடனே ரோகினி எங்கள் ரூம்பை தருகிறேன் என்று கூறி விடுகிறார். மேலும் விஜயா ரோகினியிடம் வந்து அவர்கள் இரண்டு நாளைக்குள் இங்கு இருந்து எப்படியாவது துரத்தி விட வேண்டும் என்று பேசுகிறார். இதைக் கேட்டு மிகுந்த சோகமடைக்கின்றார் கல்யாணி.  இப்படி பரபரப்பாக சிறகடிக்க ஆசை ப்ரமோ வெளியாகி இருக்கின்றது. விரைவில் ரோகினியை மாட்டிவிட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

author avatar
Mahalakshmi