நடிகை தமன்னா கவர்ச்சியாக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை தமன்னா கேடி என்ற திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு கல்லூரி திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர் தனுஷ், சூர்யா, விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கின்றார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் தற்போது தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக வலம் வரும் நடிகை தமன்னா கடைசியாக தமிழில் சுந்தர் சி யின் அரண்மனை 4 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் ஹிந்தியில் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வரும் தமன்னா அவருடன் எடுத்துக்கொடும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.
சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய தமன்னா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.