கொளுத்தி போட்ட விஜயா.. மீனா – ஸ்ருதி இடையே வெடித்த சண்டை.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்..!!

By Nanthini on புரட்டாதி 1, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது புதிய கதைகளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை அடிப்படையாகக் கொண்டு கதை நிமிர்ந்து கொண்டிருக்கும் சூழலில் ரோகிணியின் உண்மை முகம் எப்போது வெளிச்சத்திற்கு வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

   

எந்த நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து -வெற்றி வசந்த் கதாநாயகனாகவும் , மீனா என்ற கதாபாத்திரத்தில் கோமதிப்பிரியாவும் நடித்து வருகிறார்கள். அம்மா மகன்களின் பாசத்தை அடிப்படையாக தற்போது ரோகினி விஜயா இருவரும் சேர்ந்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.

   

 

சமீபத்தில் சுத்தியுடன் சேர்ந்து மீனா பேய் படம் பார்த்து அதில் பெரிய ரகளை ஏற்படுத்தியதோடு விஜயாவையும் கடும் கோபத்தில் ஆழ்த்தினார். இதனால் விஜயா ரோகினி இருவரும் ஒன்று சேர்ந்து கொண்டு திட்டமிட்டு ஸ்ருதிக்கும் மீனாவுக்கும் சண்டையை கிளப்பியுள்ளனர். ஆனால் சண்டை போடுவது போல நடித்து ஸ்ருதியும் மீனாவும் விஜயாவை ஏமாற்றம் அடைய செய்துள்ளனர். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay tv serial updates💫 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijay_serial_in)