CINEMA
உங்கள நாங்க ஏமாத்திட்டோம்.. திடீரென்று மனைவியுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரவீந்தர் போட்ட பதிவு..!!
லிப்ரா ப்ரோடுக்ஷன் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் ரவீந்திரன் நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளார். தயாரிப்பாளர் ரவீந்திரன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து இணையத்தில் பிரபலமானார். கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடிகை மகாலட்சுமியை ரவீந்திரன் திருமணம் செய்து கொண்டார்.
பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியல் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு அணில் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இன்று ரவீந்தர் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடுகிறார். அவர் தனது மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இன்னுமாடா நீங்க இன்னும் பிரியலன்னு கேட்கும் உங்களை மறுபடியும் ஏமாத்திட்டோம். என்னோட நம்பிக்கை வாழ்க்கையில் நம்ம நல்ல இருக்கணும்.
அப்புறம் குடும்பம் கூட இருக்கும் வரைக்கும். எங்கள கிண்டல், உருவ கேலி, அப்புறம் அசிங்க ப்படுத்துறது நோ யூஸ். மூன்று மாதம் தாங்குமா இவங்க கல்யாணம் அப்டின்னு கேட்ட உங்களுக்கு என்னோட அன்பான பதில் மறக்காம எங்க போட்டோ லைக் அண்ட் ஷேர் பண்ணிடுங்க என கேப்ஷனில் பதிவிட்டு தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
View this post on Instagram