CINEMA
திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஹன்சிகா.. வைரலாகும் வீடியோ..!!
பிரபல நடிகையான ஹன்சிகா கடந்த 2007-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ரிலீசான மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹன்சிகா ஹீரோயினாக தமிழ் திரை உலகில் தனது பயணத்தை தொடங்கினார். இவர் முன்னணி நடிகர்களான விஜய், கார்த்தி, விஷால், ஆர்யா உள்ளிட்டருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தொழிலதிபாரான சொஹைல் என்பவரை கடந்த 2022-ஆம் ஆண்டு ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹன்சிகா நடிப்பில் பார்ட்னர், 15 மினிட்ஸ், மை நேம் இஸ் சுருதி, கார்டியன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படங்கள் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில் ரவுடி பேபி, மேன், காந்தாரா, உள்ளிட்ட படங்களை ஹன்சிகா கைவசம் வைத்துள்ளார். சமீபகாலமாக ஹன்சிகா நடிக்கும் படங்கள் அவ்வளவாக வரவேற்பை பெறுவது இல்லை. திருமணத்திற்கு பிறகும் படங்களில் ஹன்சிகா பிஸியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்த நிலையில் ஹன்சிகா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு ரசிகர்கள் ஹன்சிகாவுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டனர். தேவஸ்தானம் சார்பில் ஹன்சிகாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திருப்பதியில் ஹன்சிகா சாமி தரிசனம்.. விடாமல் துரத்திய ரசிகர்கள்! #Tirupathi #Temple #Hansika #NewsTamil #Newstamil24x7 pic.twitter.com/EIMQDKsvwO
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) September 1, 2024