CINEMA
நான் இதைப்பற்றி பேசினதால என்னை சினிமாவில் நடிக்கவிடாம பண்ணிட்டாங்க… ஆதங்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டி…
ஸ்ரீரெட்டி பிரபலமான தென்னிந்திய நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் பணிபுரிந்தவர். 2011 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ ரெட்டி 2013 ஆம் ஆண்டு அரவிந்த் 2 என்ற தொழிலாளர் கதாநாயகியாக நடித்தார்.
இது தவிர சில சிறிய பட்ஜெட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஸ்ரீரெட்டி. குறைவான திரைப்படங்களில் நடித்த போதிலும் ஸ்ரீ ரெட்டி சர்ச்சையினால் பிரபலமானவர். டோலியூட்டில் பாலியல் விவாகரம் பெரிய அளவில் நடப்பதாக எல்லா நடிகர்களை பற்றி ஓபனாக பேசியதால் சர்ச்சைக்கு உள்ளானார்.
தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு விஷால் சினிமாவில் வாய்ப்பு தருகிறோம் என சொல்லி பெண்களை பயன்படுத்துபவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலாக ஸ்ரீரெட்டி சர்ச்சையான ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். என் செப்பல் சைஸ் இது என்று கூறு மிகவும் காட்டமாக பேசியிருந்தார். என்னதான் நேரடியாக விஷாலை தாக்காமல் இருந்த போதிலும் நெட்டிசன்கள் அவர் விஷாலைதான் குறிப்பிடுகிறார் என்று பேசி வந்தனர்.
இருவரும் ட்யூட்டரில் சண்டையிட்டு கொண்டனர். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே மலையாளத் திரையுலகத்தை பற்றி ஹேமா குழு வெளியிட்ட அறிக்கையினால் இந்திய சினிமாவே மலையாள திரையுலகம் பக்கம் திரும்பி இருக்கிறது. இப்படி திரையுலகில் எத்தனை பாலியல் துன்புறுத்தல்களா என்று மக்கள் பேசி வருகின்றனர்.
இது சம்பந்தமாக MeToo பிரச்சனையை ஓப்பனாக பேசிய ஸ்ரீ ரெட்டியை தொடர்பு கொண்டு பத்திரிகையாளர்கள் பேசியபோது, நான் எல்லாவற்றையும் உண்மையைத்தான் கூறினேன். நான் எல்லாவற்றையும் ஓபன் ஆக வெளிப்படுத்தியதனால் என்னை சினிமாவில் நடிக்க விடாமல் செய்தார்கள். எனக்கு வாய்ப்பு வராமல் தடுத்தார்கள் என்று ஆதங்கமாக பேசி இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.