CINEMA
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அறிக்கை… மௌனம் கலைத்த நடிகர் ஜெயசூர்யா…
ஜெயசூர்யா இந்திய நடிகர், விநியோகஸ்தர், ஸ்பான்சர், மாடல், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றுபவர். நூறு படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஜெயசூர்யா ஒரு மிமிக்ரி கலைஞராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
1999 ஆம் ஆண்டு பின்னணி நடிகராக அறிமுகமான ஜெயசூர்யா 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார். அதே ஆண்டு என் மன வானில் என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் வாய் பேச முடியாதவராக நடித்திருப்பார். இந்த படத்தின் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் ஜெயசூர்யா. தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகராக இருந்து வருகிறார் ஜெயசூர்யா.
தனது நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருது, மூன்று கேரள மாநில திரைப்பட விருது, இரண்டு பிலிம்பேர் விருதுகள் போன்ற விருதுகளை வென்றுள்ளார் ஜெயசூர்யா. தற்போது சமீப காலமாக அனைவரும் பரபரப்பாக மலையாள திரை உலகை பற்றி பேசி வருகின்றனர்.
அதற்கு காரணம் என்னவென்றால் ஹேமா கமிட்டி குழு மலையாளத் திரையுலகில் பெண் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது என்று அறிக்கையை வெளியிட்டது தான். அதன் எதிரொலியாக மோகன்லால் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இது மேலும் இந்த நிலைமையை தீவிரமடைய செய்தது. இதில் ஜெயசூர்யா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பல எழுந்தன. இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஜெயசூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பது என்னவென்றால், நானும் என் குடும்பத்தாரும் அமெரிக்காவில் கடந்த ஒரு மாதமாக இருந்து வருகிறோம். அந்த நேரத்தில் என் மீது இந்த மாதிரி தேவையில்லாத குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதை நான் அப்படியே விடப்போவதில்லை. என் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்து நானும் சட்டரீதியாக செல்வதற்கு முடிவெடுத்துள்ளேன். என் பிறந்த நாளான இன்று இந்த மாதிரி ஒரு வலியோடு கொண்டாடுவேன் என்று நான் நினைக்கவில்லை. எல்லாவற்றையும் சீக்கிரமாக நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று ஜெயசூர்யாவின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.