CINEMA
மருத்துவமனையில் பரபரப்பான சீன்.. ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை பகிர்ந்த ஆல்யா மானசா.. வைரல்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் அப்பாவி பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த இவர் அதில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் சீரியலில் தொடர்ந்து நடித்து வரும் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
குழந்தை பிறந்த சமயத்தில் சற்று சீரியலை விட்டு விலகினாலும் மீண்டும் என்ட்ரி கொடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் அவர் நடித்து வருகிறார். அதனைப் போலவே சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடிக்கின்றார். அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது ஆலியா இனியா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் மருத்துவமனையில் இனியா சீரியலில் எடுக்கப்பட்ட ஷூட் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க