அது என்னைக்குமே நடக்காது.. உயிருள்ளவரை இதுல தான் இருப்பேன்.. நடிகை ரோஜா செண்டிமெண்ட்..!

By Nanthini on புரட்டாதி 1, 2024

Spread the love

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியதாக அறிவித்தது முதலே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. லோக்சபா தேர்தலில் நடிகர் விஜய் கட்சி போட்டியிடவில்லை ஆனால் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் விஜய் கட்சி தீவிரமாக உள்ளது. முதல் கட்டமாக வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

   

இந்த நிலையில் இந்த மாநாட்டில் சீனியர் அரசியல் தலைவர்கள் சிலர் இணைய போவதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த பட்டியலில் நடிகை ரோஜாவின் பெயரும் அடிபடுகிறது. ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் தான் ரோஜா. தற்போது இவர் விஜய் கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜய் கட்சியில் இணைய போவதாக வெளியான செய்திக்கு நடிகை ரோஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

   

 

எனது சக நடிகரான சிரஞ்சீவி கட்சி தொடங்கிய போது அந்த கட்சியில் சேரவில்லை. தற்போது விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார் என்பதற்காக நான் எப்படி அதில் சேருவேன்? என்னுடைய உயிர் உள்ளவரை ஜெகன்மோகன் ரெட்டிக்காகவே பணியாற்றுவேன். ஒய் எஸ் ஆர் காங்கிரஸில் தான் தொடர்ந்து பயணிப்பேன் என்ற ரோஜா தெரிவித்துள்ளார்.