உனக்கு அறிவு இருக்கா..? பத்திரிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் ஜீவா..!!

By admin on புரட்டாதி 1, 2024

Spread the love

பிரபல நடிகரான ஜீவா கடந்த 2003-ஆம் ஆண்டு ரிலீசான ஆசை ஆசையா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தித்திக்குதே திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் ஜீவாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ராம், அரண், கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், சிங்கம்புலி, ரௌத்திரம், நண்பன் உன்னிடம் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

   

தற்போது ஜீவா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த பிளாக் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தேனியில் இருக்கும் ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு ஜீவா வந்தார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து ஜீவாவை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் கேரளாவில் பூதாகரமாக வெடித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.

   

 

அதற்கு பதில் அளித்த ஜீவா அது தப்பான விஷயம். அத பத்தி கேள்விப்பட்டேன். நடிகைகள் தங்களுக்கு நடந்ததை வெளிச்சம் போட்டு சொல்றாங்க. சினிமாவில் ஒரு நல்ல அட்மாஸ்பியர் இருக்க வேண்டும் நான் நினைக்கிறேன் என ஜீவா கூறினார். அதன் பிறகும் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர். அப்போது ஜீவா எனக்கு தெரியாது என்பதைப் போல ஒரு பதிலை கூறினார்.

அதற்கு செய்தியாளர்கள் நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி குறித்து ஒரு கேள்வியை கேட்டோம் என மீண்டும் அதைப் பற்றிய பேசினர். இதனால் கோபமடைந்த ஜீவா செய்தியாளர் ஒருவரிடம் உனக்கு அறிவு இருக்கா? என உரிமையில் பேசி உள்ளார். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் ஜீவாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.