அன்பு மனைவிக்கு வாழ்த்து சொன்ன புகழ்.. ஓஹோ இது தான் விஷயமா..!!

By Priya Ram on செப்டம்பர் 1, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியவர் புகழ். புகழுக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து முன்னிலைக்கு வந்துள்ளார். நிறைய போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.

   

தனது காமெடியால் புகழ் பலரையும் சிரிக்க வைத்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு பெண்ணைத்தான் புகழ் காதலிக்கிறார் என்று வதந்தி பரவியது. ஆனால் புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்சியை சோசியல் மீடியாவில் அறிமுகப்படுத்தினார். அதனை பார்த்து பலரும் ஷாக் ஆனார்கள். இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

   

 

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விழுப்புரம் அருகில் இருக்கும் கோவிலில் புகழ் தனது காதலி பென்சியை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சென்னையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இன்று புகழ் பென்சி தம்பதியினர் தங்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

இந்த நிலையில் புகழ் தனது திருமண புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இல்லற இணையேற்பு பயணத்தில் என்னுடன் இணைந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு மனைவிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் புகழுக்கும் பென்சிக்கும் திருமண நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)