ASTROLOGY
ரிஷப ராசியினருக்கான அதிர்ஷ்ட கல், நிறம், எண் மற்றும் நாட்கள்… மேலும் பல முக்கிய தகவல்கள் இதோ…
ரிஷப ராசிக்காரர்கள் கடின உழைப்பாளியாக இருப்பார்கள். எல்லோரையும் நேசிப்பவர்கள். மிகவும் பொறுமைகுணம் கொண்டவர்கள். இவர்களது வெற்றி தாமதமாகும் ஆனால் நிலையானதாக இருக்கும். கம்பீரமாக எல்லா வேலைகளையும் செய்து முடிப்பவர்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு உரிய அதிர்ஷ்ட எண் ஆனது 6 ஆகும். ஆறின் கூட்டு எண்கள் ஆன 12 18 24 போன்றவைகளும் ராசியான எண்கள் ஆகும். இது தவிர 4 5 8 ஆகிய எண்களும் ராசியானது தான்.
ரிஷப ராசி கரங்களுக்கான அதிர்ஷ்டமான ராசி கல் ஆனது வைரம் ஆகும். இந்த ராசிக்காரர்களுக்கு துன்பம் நேராமல் இருக்க வைரம் அணிய வேண்டும். இந்த வைரக்கல்லை வெள்ளை தங்கத்தில் அல்லது வெள்ளியில் வைரக்கல் வைத்து அணிந்தால் சங்கடம் தீரும். அப்படி வைரக்கல்லை இவர்கள் அணிய வேண்டுமென்றால் சனிக்கிழமையில் சுப தினத்தில் அணிய வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதன்கிழமை உன்னதமான நாளாகும். இவர்கள் இந்த நாட்களில் எந்த காரியத்தையும் தொடங்கினால் வெற்றி உண்டாகும். அதேபோல் இந்த நாட்கள் பௌர்ணமி தினத்தில் வந்தால் அந்த நாட்களில் எந்த காரியமும் செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ரிஷப ராசிக்காரர்களின் ராசியான நிறமாக கூறப்படுவது நீலம் மற்றும் நாவல் பல நிறம் ஆகும். இந்த நிறமுடைய ஆடைகளை அணிவதன் மூலம் இவர்களுக்கு அமைதி நிலவும். வெண்மை நிறம் அணிந்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வெற்றியை தரும். எனவே இவர்கள் அணியும் ஆடையில் வெண்மை நிறம் இருந்தால் மிகவும் சிறப்பு.