CINEMA
“இவர புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்”… முத்துவை வசமாக மாட்டி விட்ட மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் அம்மா மகன் பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. தினம்தோறும் குடும்பத்தில் ஏதாவது சண்டை நடந்தாலும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் சீரியலை பார்க்கத் தூண்டும் வகையில் பல திருப்பங்கள் சீரியலில் நடந்து கொண்டிருக்கின்றன.
நேற்றைய எபிசோடில் விஜயா போட்ட மாஸ்டர் பிளானை மீனாவும் ஸ்ருதியும் அசால்ட் ஆக தட்டி விடுகின்றனர். மறுபக்கம் ரோகிணியின் அம்மா சீரியசாக ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு வந்த ரோகினி என்ன ஆச்சு என்று கேட்டு மிகவும் பதற்றத்துடன் பேசுகிறார். தன் அம்மாவுக்கு இப்படி ஆகிவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் வருத்தத்துடன் ரோகிணி இருக்கிறார்.
இது ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க மறுப்பக்கம் முத்து மற்றும் மீனா இருவரும் அனைத்து விஷயத்திலும் உண்மையாக இருந்து வருவதால் எந்த ஒரு கவலையும் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போது இருவரும் சின்ன சண்டை போட்டுக்கொண்டு சமாதானம் ஆகும் காட்சி இணையத்தில் ப்ரோமோவாக வெளியாகி உள்ள நிலையில் இன்றைய எபிசோடில் இதனை காணலாம். இது தொடர்பான புரோமோ தற்போது ரசிகர்களை கவர்ந்து உள்ள நிலையில் அடுத்தடுத்து சீரியலில் என்ன நடக்கப் போகிறது என மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.