CINEMA
“நேற்று இல்லை, நாளை இல்லை.. எப்பவும் நான் ராஜா”… லண்டன் டு பாரிஸ்.. மாஸ் வீடியோ வெளியிட்ட இளையராஜா..!
தமிழ் சினிமாவில் இசையுலகின் ஞானியாக கொண்டாடப்படுபவர் தான் இளையராஜா. அன்னக்கிளி ஆரம்பித்து ஆயிரம் படத்துக்கு மேல் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே தன்னுடைய இசை ஆற்றலால் அண்ணாந்து பார்க்க வைத்த மேஸ்ட்ரோ இளையராஜா சமீபகாலமாக இசை கச்சேரிகளை நடத்தி சர்வதேச ரசிகர்களை கொண்டாட வைத்து வருகின்றார்.
இவருடைய இசைக் கச்சேரியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் லண்டன் மற்றும் பாரிஸ் சொல்லிட்ட நகரங்களில் இசை கச்சேரி நடத்தி வருகின்றார். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற truly live in concept என்ற இசைக்கச்சேரியில் லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களில் சமீபத்தில் நடைபெற்றது. அதற்காக இங்கிலாந்தின் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரம் வரை இளையராஜா ரயில் பயணம் மேற்கொண்ட நிலையில் அந்த வீடியோவை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவுக்கு பின்னால், ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலை ஒலிக்க விட்டுள்ளார். அந்த வீடியோவை வெளியிட்டு அவர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான ஜமா படம் பாராட்டுக்களை பெற்ற நிலையில் அடுத்ததாக விடுதலை 2 திரைப்படம் இவருடைய இசையில் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.
London to Paris pic.twitter.com/kOydSeyYmu
— Ilaiyaraaja (@ilaiyaraaja) September 3, 2024