CINEMA
இதை விஜய் அப்பவே சொன்னாரு, ஆனா நாங்க தான் கேட்கல.. கோட் குறித்து மனம் திறந்த அர்ச்சனா கல்பாத்தி..!
நடிகர் விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள கோட் படம் ரிலீசுக்கு சிறப்பான வகையில் தயாராகி உள்ளது. நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் நாளை திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரமோஷன்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அடுத்தடுத்து முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் படத்தின் நடிகர்கள் லைலா, சினேகா, வைபவ் உள்ளிட்டவர்களும் படத்தின் சுவாரசியங்கள் குறித்து அடுத்தடுத்து பகிர்ந்து வருகின்றனர். கோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. படத்தைப் பற்றி இயக்குனர் ஒரு பக்கம், தயாரிப்பாளர் ஒரு பக்கம் என அனைவரும் புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்கள்.
படத்தைப் பற்றி ஒரு பெரிய ஹைப் இல்லாதவரை படத்திற்கு நல்லது என்று சொன்ன தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே ரிலீஸ் தேதி நெருங்கும் வேலையில் புதுப்புது சர்ப்ரைஸ்களை கொடுத்து வருகின்றார். இந்நிலையில் அர்ச்சனா கல்பாத்தி கோட் திரைப்படம் குறித்து அளித்த பேட்டியில், விஜய் அப்பவே எங்க கிட்ட சொன்னாரு, ஆனா அத நாங்க தான் கேட்கல. படத்தில் என்னை ரொம்ப மாத்தாதீங்க, என்னை என்ன மாதிரி காட்டினால் மட்டும் போதும் என முதலிலேயே கூறிவிட்டார். அவருடைய அட்வைஸ் சரியானதாக தான் இருந்தது என கூறியுள்ளார்.