CINEMA
“ராமமூர்த்தி தாத்தா இறந்துட்டாரு”.. இனி பாக்கியலட்சுமி கதை இப்படித்தான் இருக்க போகுது.. உண்மையை உளறிய மயூ..!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தில் இருந்து வருகின்றது.
இந்த சீரியலில் தற்போது ராமமூர்த்தி இறந்துவிட ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் உள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக எதிர்பாராத வகையில் ராமமூர்த்தியின் மரணம் வந்துள்ளது. குடும்பத்திற்கு தூணாகவும் பாக்கியலட்சுமிக்கு வரும் பிரச்சனைகளில் துணையாக இருந்து வந்த இவர் இப்போது இல்லை என்பதை சீரியல் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மேலும் சீரியலில் வரும் காட்சிகள் அனைத்தும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நொடிக்கு ஒரு முறை ராமமூர்த்தியின் முகத்திற்கு குளோசப் வைக்கிறார்கள்.
இந்த சம்பவம் ரசிகர்களை மேலும் கலங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் ராதிகாவின் மகளாக நடிக்கும் மயூ கொடுத்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில், ராமமூர்த்தி தாத்தா இறந்த பிறகு அப்படியே நிஜத்தில் ஒருவர் இறந்துவிட்டால் எப்படி இருக்குமோ அதுபோல அங்கு அனைத்து சடங்குகளும் செய்தனர்.
இறுதியாக நடைபெறும் சடங்குக்கு மட்டும் என்னை வரவேண்டாம் என்று கூறி விட்டனர். வீட்டில் வைத்து நடக்கும் எல்லா சடங்குகளுக்கும் நானும் அங்கே தான் இருந்தேன். எனக்கு அதை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சீரியலில் இனிவரும் காட்சிகள் அனைத்தும் வேறு விதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இனி கதைக்களம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.