சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் செய்வினை நீக்குவதற்காக மனோஜ் தனது அம்மாவிடம் கூறி விரதம் இருந்து கோவிலுக்கு சென்று நேர்த்தி கடன் செய்ய வேண்டும் என்று சம்மதிக்க வைக்கிறான். குடும்பத்தில் அனைவருக்கும் கரண்ட் ஷாக் அடித்து விடுகிறது. அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் கரண்ட் ஷாக் அடித்த அனைவரையும் மீனா வந்து காப்பாற்றுகிறார். விஜயா கையில் ஒரு அடி அடித்துடன் அவ்வளவு பேரும் கீழே விழுந்து விடுகிறார்கள். பிறகு யார் காரணம் என்று பார்க்கும்போது மனோஜ் தான் மீட்டரை ஆன் செய்து வைத்திருக்கிறான். எல்லோருக்கும் அவனைத் திட்டினார்கள்.
அடுத்ததாக மீனா ஏற்கனவே கல்யாண ஆர்டருக்கு டெக்ரேசன் பண்ணுவதற்கு சொல்லிவிட்டு வந்திருந்தாள். அங்கிருந்து அவளுக்கு போன் வந்தது. ஆர்டர் உங்களுக்கு தருகிறோம் என்று சொல்கிறார்கள். சந்தோஷத்துடன் மீனா செல்கிறாள். எங்க ஓனர் உங்களுக்கு தான் ஆர்டர் கொடுக்கணும்னு சொல்லி இருக்காரு. நீங்க இந்த வாட்டி எப்படி பண்றீங்கன்னு பார்த்துட்டு தொடர்ந்து நாங்க ஆர்டர் தருவோம் என்று அங்கு இருக்கும் மேனேஜர் சொல்கிறார்.
அது மட்டும் இல்லாமல் மீனாவுக்கு 10,000 அட்வான்ஸ் கொடுக்கிறார். மிகவும் சந்தோஷத்தோடு மீனா வீட்டிற்கு வருகிறாள். வீட்டிற்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்து தனது மாமா அத்தை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுக்கிறார். வழக்கம்போல விஜயா மீனாவை மட்டம் தட்டி பேசுகிறார். மற்ற எல்லாரும் பாராட்டுகிறார்கள். முத்து மிகவும் சந்தோஷமடைந்து நீ எல்லாருக்கும் இன்னிக்கு ட்ரீட் வை பிரியாணி செய் என்று சொல்லி சொல்லி விட்டு செல்கிறான்.
அடுத்ததாக மீனா தனது தோழியை பார்க்க செல்கிறார். அங்க போய் 15 பேர் சாப்பிடுற படி பிரியாணி பண்ணி தர முடியுமா என்று கேட்கிறாள். எனக்கு இப்போ முடியாது உடம்பு சரியில்ல நான் உனக்கு சொல்லி தரேன் நீ செய் ஈஸி தான் என்று சொல்லுகிறார். உடனே கறி வாங்க செல்கிறார்கள். அங்கு கறி வெட்டும் ஆளை பார்த்தால் அது ரோகினி மாமாவாக நடிக்க வந்த நபர் தான். மீனா அம்மாவிடம் போன் பண்ணி விவரத்தை கூறுகிறாள். மீனாவின் தோழி கறி வெட்டும் நபரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். உடனே மீனாவை பார்த்த அந்த நபர் சுதாரித்துக் கொண்டு முகத்தை மூடி கொள்கிறார். விட்டிருந்தால் மீனாவிடம் அவர் மாட்டி இருப்பார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.