பழம்பெரும் முன்னணி ஜரீனா வஹாப் சமீபத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தேவரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகின்றார். மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகக்கூடிய இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வரும் நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஜரீனா, மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில் 2025 ஏப்ரல் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜரீனா, அடுத்த ஜென்மத்தில் எனக்கு இரண்டு மகன்கள் வேண்டும். அதில் ஒருவர் நடிகர் பிரபாஸை போலவும் மற்றொரு மகன் என்னுடைய உண்மையான மகன் சூரஜ் போலவும் இருக்க வேண்டும் என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் பிரபாஸ் பாகுபலி திரைப்படம் மூலமாகத்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி 2898 ஏ டி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் புகழின் உச்சத்திற்கு சென்றார். அதே சமயம் இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி நடிகர் பிரபாஸ் சமீபத்தில் முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.