Categories: சினிமா

முத்துவின் செல்போனை எடுத்த வித்யா.. ரோகினியின் அம்மா, மகனையும் வீட்டிற்கு அழைத்து வரும் முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு..!

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில், கொலு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஸ்ருதியின் அம்மா பூஜையில் கலந்து கொள்ள வீட்டிற்கு வருகிறார். அப்போது அவர் தனியாக வருவதால் முத்து எங்க வீட்டுக்கு எல்லாம் நீங்க வர மாட்டீங்களே உங்க வீட்டுக்காரர் வேலையா வெளியூர் போயிட்டாங்களா என்று கூறி கிண்டல் செய்கிறார். அப்படி எல்லாம் இல்ல அவருக்கு வர டைம் இல்லை என்று ஸ்ருதியின் அம்மா கூறுகிறார். பிறகு ரவியும் ஏன் உங்க அப்பா இப்படி பண்றார் கல்யாணம் ஆனதிலிருந்து இதுவரைக்கும் ஒரு டைம் கூட நம்ம வீட்டுக்கு வரல எங்கள் அவமானப்படுத்துகிறாரா என்று கேட்கிறார். இது பெண்கள் கலந்து கொள்ளும் விழா அவருக்கு இங்க என்ன வேலை அவர் ஏன் வரலன்னு நீ தான் அவர்கிட்ட போய் கேக்கணும் என்று ஸ்ருதி கூறிவிட்டு செல்கிறார்.

பிறகு வித்யா பூஜையில் கோலாட்டம் ஆடுவதற்கான பொருட்களை வாங்கிக் கொண்டு வருகிறார். பூஜை நடந்ததும் அனைவரும் கோலாட்டம் ஆடுகின்றனர். அப்போது முத்து அனைவரையும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். பிறகு முத்துவையும் ஆட அழைக்கும் நிலையில் வித்யா செல்போனை வாங்கிக் கொண்டு வீடியோ எடுப்பது போல நடிக்கிறார். பிறகு நாசுக்காக செல்போனை தூக்கிக் கொண்டு உள்ளே செல்கிறார். ரோகினியும் சென்று வீடியோவை பார்த்து தங்கள் செல்போனில் அனுப்ப பார்த்துக் கொண்டிருக்கும்போது முத்துவும் மீனாவும் அந்த சமயத்தில் உள்ளே வருகின்றன.

முத்து விளையாட்டாக மீனாவை துரத்தி வர மீனா ரோஹினியை இடித்ததும் செல்போன் கீழே விழுந்து உடைந்து விடுகிறது. மீனா செல்போனை எடுத்து பார்த்ததும் அது முத்துவின் செல்போன் என்று தெரிகிறது. உடனே நாங்கள் வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தோம் என்ற ரோகிணி சமாளிக்கிறார். பிறகு முத்து செல்போனை வாங்கிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார். செல்போன் உடைந்துவிட்டது இனி எப்படி அந்த வீடியோவை எடுக்க முடியும் என்று ரோகினி வித்யாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும், ரோகினியின் அம்மா வீட்டுக்கு சென்று பூஜையில் கலந்து கொள்ள ரோகிணியின் அம்மாவையும் மகனையும் அழைத்து வர முடிவு செய்கின்றனர். அங்கு சென்று வாங்க பூஜைக்கு கலந்து கொள்ள வீட்டுக்கு போகலாம் என்று மீனா கூறும் நிலையில் ரோகிணியின் அம்மா நான் எல்லாம் அந்த பூஜையில் கலந்து கொள்ள கூடாது நான் வரவில்லை என்று கூறி சமாளிக்கிறார். ஆனால் மீனா மிகவும் வற்புறுத்தி எப்படியாவது வந்து விடுங்கள் என்று கூறியதும் அவர் வீட்டிற்கு கிளம்ப தயாராகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Nanthini

Recent Posts

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

2 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜாக்பாட்… இனி எந்த கடையிலும் பொருட்கள் வாங்கலாம்… ஏடிஎம் போல மாறும் சிஸ்டம்… மத்திய அரசின் அதிரடி அப்டேட்…!!

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள் இனி தங்களுக்குரிய உணவுப் பொருட்களைப்…

3 minutes ago

கணவனே எமன்…. அன்னூர் கிணற்றில் சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்…. 4 நாளில் வெளியான பகீர் உண்மை….!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், மூடப்பட்டுக் கிடக்கும் தனியாருக்குச் சொந்தமான…

6 minutes ago

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

9 minutes ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

11 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

14 minutes ago