சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மனோஜின் பங்களாவிற்கு கிளம்ப வேண்டும் என்று அனைவரும் ரெடியாகி கொண்டிருக்கிறார்கள். விஜயா பயங்கர அலப்பறை செய்து கொண்டிருக்கிறார். அண்ணாமலை நக்கலடித்து கொண்டிருக்கிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

இன்றைய எபிசோடில் முத்து மீனாவை தவிர அனைவரும் மனோஜ் பங்களாவிற்கு வருகின்றனர். வந்தவுடன் ஓனரை பார்த்து பேசுகின்றனர். உடனே டாக்குமெண்டில் கையெழுத்திட்டு ஏற்கனவே 5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துட்டேன் இதுல 25 லட்சம் இருக்குது என்று மனோஜ் ஓனரிடம் கொடுக்கிறார். ஓனர் அதை வாங்கிக்கொண்டு ஆறு மாசத்துல மீதி பணத்தை கொடுத்திருங்க என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக கிளம்புகிறார்கள்.
அப்போது வீட்டை விட்டு வெளியே காரில் வரும்பொழுது எதிரில் முத்துவின் காரில் ஓனர் வந்த வாடகை கார் முட்டியது. அப்போது முத்து யார் இப்படி இடிக்கிற மாதிரி வரீங்க அப்படி என்று அவசரம் என்று சத்தம் போடுகிறார். உடனே மனோஜ் எல்லாரும் வெளிய வந்து சமாதானப்படுத்தி ஓனரை அனுப்பி வைக்கிறார். பின்னர் முத்து மனோஜிடம் யாருடா இந்த ஆளு என்று கேட்கும் போது இவர் தாண்டா இந்த வீட்டுக்கு ஓனர் அவர்கிட்ட தான் இந்த வீட்டை வாங்கி இருக்கேன் என்று சொல்லுகிறார்.
உடனே முத்து யோசித்துக் கொண்டு அண்ணாமலையிடம் அப்பா அந்த ஓனர் எதுக்கு இப்படி அவசர அவசரமா இன்னைக்கு ஓடணும் இவ்ளோ பெரிய பங்களாவுக்கு சொந்தக்காரனை எதுக்கு வாடகை காரில் போகணும் எனக்கு என்னமோ ரொம்ப சந்தேகமா இருக்கு நான் போய் புடிச்சிடுறேன் என்று கிளம்ப பார்க்கிறார். அப்போது மனோஜ் முத்துவை தடுத்து 5 கோடி வீட்டை 3 கோடிக்கு பேசி வாங்கியிருக்கேன் நீ கெடுத்து விட்றாத அவங்க பாரின்ல இருக்காங்க அதனால ஏர்போர்ட்க்கு வாடகை காரில் போறாங்க என்று மனோஜ் கூறுகிறார்.
அண்ணாமலை விடுடா முத்து பார்த்துக்கலாம் நம்ம போய் வீட்ல போய் இருக்கலாம் என்று கூட்டி செல்கிறார். உள்ளே அனைவரும் வீடை சுற்றி பார்க்கின்றனர். மீனா ரவி ஸ்ருதி மூணு பேரும் பீச்சுக்கு சென்று பார்த்துவிட்டு வருகின்றனர். முத்து அண்ணாமலை வைத்து போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். விஜயாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பெருமை பேசிக்கொண்டே இருக்கிறார். உடனே விஜயா சும்மா இருக்காமல் ஸ்ருதியிடம் வம்பு இழுக்கிறார். பாத்தியா ஸ்ருதி எவ்வளவு பெரிய வீடா இருக்கு சுத்தி பார்க்கவே நேரம் பத்தாது போல இருக்கு அப்படின்னு சொல்கிறார்.
உடனே ஸ்ருதி நோஸ்கட் பண்ணுவது போல் இங்கே பக்கத்தில் தான் எங்க அப்பாவோட பீச் ஹவுஸ் இருக்கு ஆன்ட்டி அது மட்டும் இல்லாம எங்க அப்பாவுக்கு கேரளால போர்ட் ஹவுஸ் இருக்கு. அடுத்ததா yacht ரெடி பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். இதை பார்த்து ரவி சிரித்துக்கொண்டு இது தேவையா அம்மா அப்படின்னு சொல்லுகிறார்.

அடுத்ததாக அனைவரும் வீட்டுக்குள்ளே வருகின்றனர். மீனா போய் எனக்கு காபி போட்டு வா என்று விஜயா கூறுகிறார். மீனா அத்தை பிரிட்ஜ் இருக்கு ஆனா பிரிட்ஜ் ஆஃப்ல இருக்கு. அதுல இருக்க பால் எப்ப வாங்குன பால் பாக்கெட்ன்னு தெரியல அதுல காபி போட்டா உங்க வயிற்றுக்கு ஏதாவது ஆயிடும் என்று கூறுகிறார். உடனே முத்து மீனா பார்த்தா மட்டும் தான் உங்களுக்கு இங்க வேலை செய்யணும் தோணுமா எங்க போனாலும் அவதான் வேலை செய்யணுமா என்று கேட்கிறார். அடுத்ததா ஸ்ருதி விஜயாவை பயமுறுத்துகிறார். வேண்டாம் ஆன்டி ரிஸ்க் எடுக்காதீங்க ஹாஸ்பிடல் போய் அட்மிட் ஆக போறீங்க என்று சொல்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
