தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 20 ஆண்டுகளாக தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்து வரும் நயன்தாரா சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத்தாய் முறையில் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நயன்தாராவின் ஆவணப்படம் வெளியான நிலையில் அதில் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் காட்சிகளை இணைத்ததற்கு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு இருந்த நிலையில் நயன்தாரா அறிக்கை வெளியிட்ட பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இது தொடர்பான விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே வலைப்பேச்சு நிகழ்ச்சியில் 50 எபிசோடுகள் ஒளிபரப்பானால் அதில் 45 எபிசோடுகள் தன்னை பற்றி தான் இருக்கும் என்றும் தன்னை வைத்து அவர்கள் நிகழ்ச்சியை உருவாக்கி காசு பார்ப்பதாகவும் நயன்தாரா சமீபத்திய பேட்டி ஒன்றில் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை போட வேண்டாம் என்று தான் தயாரிப்பாளர்களிடம் கெஞ்சுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்தில் அளித்த பேட்டியில் நயன்தாரா பற்றிய பல உண்மைகளை கூறியுள்ளார். அதில், நயன்தாரா பல இயக்குனர்களை டார்ச்சர் செய்துள்ளார்.

அதன்படி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் SR பிரபு தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் ஓ2. இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு நயன்தாரா பயங்கரமான டார்ச்சர் செய்தார். இந்த படத்தின் கதையே ஒரு பேருந்து மண்ணுக்குள் புதைந்து அதிலிருந்து அனைவரும் எப்படி மீண்டும் வருகிறார்கள் என்பதுதான். மண்ணுக்குள் புதைந்த பேருந்துக்குள் இருக்கும் அனைவருக்கும் உடம்பில் சேறு சகதி இருக்கத்தான் செய்யும். ஆனால் நயன்தாரா என் மேல் சகதி எதுவும் இருக்கக் கூடாது என்னுடைய மேக்கப் எதுவும் கலைய கூடாது நான் எப்படி இருக்கேனோ அப்படியே தான் இருப்பேன் அந்த அளவுக்கு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி பயங்கரமான டார்ச்சர் செய்துள்ளார். கடைசியில் அந்த படமே பிளாப் ஆயிருச்சு என்று பிஸ்மி பேசியுள்ளார்.
