சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் முத்துவை காணவில்லை என்று மீனா தேடுகிறாள். கார் செட்டில் போய் தேடுகிறாள் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறாள். விஜயா ஒரு பக்கம் மனோஜ் பங்களா வாங்க போகிறான் என பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் மீனாவும் சத்யாவும் சேர்ந்து டாஸ்மாக் வரையிலும் சென்று முத்து இருக்கிறாரா என்று தேடிப் பார்க்கிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. இறுதியில் அவர் வீட்டுக்கு வருவாருக்கா என்று சொல்லி சத்யா மீனாவை வீட்டில் விட்டுவிட்டு சென்று விடுகிறார்.
வீட்டில் வந்து அண்ணாமலை இடம் இப்படி போன் பண்ணாம இருக்கவே மாட்டார் என்ன ஆச்சுனே தெரியல மாமா என்று வருத்தத்தில் பேசிட்டு சாமி ரூமுக்கு சென்று சாமி கும்பிடுகிறாள் மீனா. அண்ணாமலை தூங்காமல் சோபாவில் இருக்கிறார். நீங்க தூங்குங்க மாமா என்று மீனா சொல்லி கேட்கவில்லை. ரொம்ப நேரம் கழித்து முத்து வருகிறார்.
உடனே அண்ணாமலை கோபப்பட்டு முத்துவிடம் கத்துகிறார். எதுக்குடா இப்படி பண்ணுன அவ கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போக மாட்டியா காலையிலிருந்து சாப்பிடாமல் உன்னை தேடி அலைஞ்சிட்டு இருக்கா என்று சொல்லிவிட்டு அவர் சென்று விடுகிறார்.
அடுத்ததாக மீனா ஏங்க இப்படி செஞ்சீங்க என்ன கோபம் உங்களுக்கு அப்படின்னு சொல்லி கேட்கும் போது கையிலிருந்த பணத்தை எடுத்து கட்டிலில் வைத்து இதுக்காக தான் நான் போனேன். நேத்து நீ ஒரு வார்த்தை சொன்ன உங்களை விட நான் அதிகமா சம்பாதிச்சுட்டேன்னு அது எனக்கு சுருக்குன்னு பட்டுருச்சு இன்னைக்கு உன்ன விட அதிகமா சம்பாதிச்சு காட்டணும் என்கிற வைராக்கியத்தில் தான் நான் போனேன் என்று கூறுகிறான் முத்து.

உடனே மீனா கண்கலங்கி ஆத்திரத்தில் பயங்கரமாக பேசுகிறார். அப்போ உங்கள பொருத்தவரைக்கும் பொம்பளைங்க வந்து முன்னுக்கு வந்துடக்கூடாது புருஷனை விட பொண்டாட்டி ஒரு ரூபாய் அதிகமா சம்பாதிச்சிட கூடாது அப்படித்தானே உங்களுடைய எண்ணம் என்று கத்துகிறாள். எனக்கு சாப்பாடு எல்லாம் ஒன்னும் வேணாம் நான் ஒன்னும் செத்தர மாட்டேன்னு கூறுகிறாள்மீனா. உடனே முத்து சமாதானப்படுத்தி எனக்கு நடிக்க தெரியாது மீனா எனக்கு மனசுல தோணுச்சு அதனால தான் நான் அப்படி பண்ணினேன் என்று கூறிவிட்டு சமாதானப்படுத்தி மீனாவை சாப்பிட வைக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
