சந்தானபாரதியோட நான் போட்ட சண்டையாலதான் அந்த நல்ல வரிகள் கிடைத்தன… வைரமுத்து பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on மார்கழி 13, 2024

Spread the love

1980 ஆம் ஆண்டு நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் அறிமுகம் ஆனவர் வைரமுத்து. அப்போது இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.

   

ஆனாலும் ரஹ்மானின் வருகைக்குப் பிறகு வைரமுத்து தனது செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கி இப்போது வரை முன்னணி பாடல் ஆசிரியராக இருக்கிறார். ஆனால் அவர் இத்தனை ஆண்டுகள் சேர்த்து வைத்த புகழை அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒரே நாளில் வீழ்த்திவிட்டன. முதலில் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்தவர் பாடகி சின்மயிதான். அவர் தொடர்ந்து வைரமுத்துவின் அத்துமீறல்களைப் பட்டியலிட்டு அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லிவந்தார். இதனால் வைரமுத்து சினிமாவில் பாடல்கள் எழுதும் வாய்ப்புகளை இழந்துள்ளார்.

   

 

வைரமுத்துவை முன்னணிப் பாடல் ஆசிரியர் ஆக்கிய பாடல்களில் ராஜபார்வை படத்தில் இடம்பெற்ற அந்திமழை பொழிகிறது என்ற பாடலுக்கு ஒரு இடம் உண்டு. சமீபத்தில் அந்த படம் சம்மந்தமாக நடந்த ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து அந்த பாடல் உருவான விதம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “ராஜபார்வை படத்தில் அந்திமழை பொழிகிறது பாடலுக்காக நான் முதலில் எழுதிய பல்லவி வரிகள் ‘திராட்சை ரசம் வழிகிறது’ என்பவைதான். ஆனால் அந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சந்தானபாரதிதான் அந்த வரி பொருந்தவில்லை என சொல்லி என்னிடம் சண்டை போட்டு வரியை மாற்றினார். ஆனால் கடைசியில் அந்த வரிகள்தான் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது என்பதை நான் பின்னால் புரிந்து கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.