திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பக்கம் நிலக்கோட்டையை சேர்ந்தவர்தான் ராமதாஸ். இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை முனுஷ்காந்த் என்று மாற்றிக் கொண்டார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் நடித்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு தான் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இப்படி தொடர்ந்து சூது கவ்வும், பீட்சா, ஈஸ்வரன் மற்றும் பேச்சுலர் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டார். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு தனது சொந்த ஊரிலிருந்து சினிமா மீது உள்ள ஆசையால் சென்னைக்கு வந்தார். சுமார் 12 ஆண்டுகள் எப்படியாவது ஒரு நடிகராகி விட வேண்டும் என்று கடுமையாக போராடி உள்ளார்.

ஆனால் அந்த வாய்ப்பு அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. அதுவரைக்கும் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டும் என்று நினைத்த அவர் ஹோட்டல்களில் எச்சில் இலை எடுக்கும் வேலை தொடங்கி கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை வரை அனைத்து வேலைகளையும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர் ஊதாரித்தனமாக சென்னையில் சுற்றிக் கொண்டிருப்பதாக நினைத்து அவருடைய குடும்பத்தினர் அவமானப்படுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்டனர்.
![]()
எப்படியாவது சினிமாவில் சாதித்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு போராடியவர் 12 வருடங்களுக்குப் பிறகு முனீஸ் காந்த் என்ற கதாபாத்திரத்தில் முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்திற்கு முன்பு அடி ஆள் மற்றும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த முனிஷ்காந்த் முண்டாசுப்பட்டி திரைப்படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். தன்னம்பிக்கையோடு போராடி வெற்றி பெற்ற 40 வயதில் திருமணம் செய்து கொண்ட முனிஷ்காந்த் எங்கு அவமானப்பட்டு வந்தாரோ தற்போது அந்த ஊரின் அடையாளமாக திகழ்ந்து வருகிறார்.
