Categories: சினிமா

மீனாவின் செயலால் கண்கலங்கிய அண்ணாமலை… பங்களா வாங்க திட்டமிடும் ரோகிணி… சிறகடிக்க ஆசையில் இன்று…

Spread the love

சிறகடிக்க ஆசை தொடரின் சனிக்கிழமை எபிசோடில் மனோஜின் பிசினஸில் நல்ல லாபம் கிடைக்கிறது. அதை வீட்டில் கூறி அனைவர்க்கும் ஸ்வீட் தருகிறான். அண்ணாமலை வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் வீட்டில் மனோஜ் தனது பிசினஸில் அடுத்த லெவலுக்கு செல்வதாக கூறிக் கொண்டிருக்கும் போது இது எல்லாரும் தான் பண்ணுவாங்கன்னு முத்து சொல்ல ரோகிணி கோபப்பட்டு மனோஜ் ரொம்ப டேலண்ட் ஆனவர் அப்படி பேசாதீங்க முத்து என்று கூறுகிறார். அடுத்ததாக மனோஜ் தனது அம்மாவிடம் அவன் கிடக்கிறான் விடுங்கம்மா நான் இன்னொரு நல்ல விஷயமும் சொல்றேன் நானும் ரோகிணியும் ஒரு பங்களா வாங்கலாம்னு பார்த்து வச்சிருக்கோம் என்று கூறுகிறான். இதை கேட்டவுடன் விஜயாவுக்கு மகிழ்ச்சி கூடி விடுகிறது.

அதுமட்டுமில்லாமல் மனோஜூம் ரோகிணியும் விஜயாவுக்கு தங்கத்தில் வளையல் வாங்கி கொடுக்கிறார்கள். அண்ணாமலைக்கு வேட்டி சட்டை எடுத்து கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இதை பார்த்தவுடன் விஜயாவுக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டு பெருமையாக பேசுகிறார். என் பையன் மனோஜ் என்ன பங்களால உட்கார வைக்க போகிறான் என்று கூறுகிறார்.

அடுத்ததாக அண்ணாமலை நான் வேலைக்கு செல்ல போகிறேன் என்று கூறுகிறார். அப்போது வேண்டாம் என்ற முத்து சொல்கிறான். உடனே வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறார்கள். மாமாவுக்கு வீட்டிலிருந்து போரடிக்கும் அதனால அவங்க காலாற போயிட்டு வரட்டும் என்று சொல்கிறார்கள். அடுத்ததாக மாடியில் மீனா தனியா யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது முத்து வந்து என்னாச்சு என்று கேட்கும் போது இந்த வீட்டில் எல்லாரும் வாழனும் தானே மாமாவோட ஆசை இப்போ மனோஜ் ரோகினி வீடு வாங்கிட்டு போயிட்டாங்கன்னா இந்த வீடு வெறுமையாய் ஆகிடும் மாமா வருத்தப்படுவாங்களே என்று மீனா கூறுகிறார்.

உடனே முத்து அவன் வீடு வாங்கி போற அப்போ பார்த்துக்கலாம் என்று சொல்கிறான். அடுத்ததாக அண்ணாமலை வேலைக்கு கிளம்புகிறார். அப்போது மீனா சாப்பாடு கட்டி வந்து கொடுக்கிறாள். இதை பார்த்தவுடன் கண்கலங்கி விடுகிறார் அண்ணாமலை. எங்க அம்மா தான் எனக்கு வேலைக்கு போகும்போது சாப்பாடு கட்டி தருவாங்க. இப்போ இத பாத்ததும் அம்மா ஞாபகம் வந்துடுச்சு என கண்கலங்குகிறார். அடுத்ததாக ரோகிணி தனது அம்மாவையும் மகனையும் பார்க்கப் போகிறார் அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.

admin

Recent Posts

பகீர் கிளப்பும் ரவி மோகன் வீட்டு விவகாரம்… நள்ளிரவில் போலீசாருக்கு வந்த அந்த ஒரு போன் கால்… போலீஸ் விசாரணையில் வெளியான ஷாக் தகவல்….!

சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…

2 seconds ago

திருச்செந்தூர் கோயிலில் திடீர் மாற்றம்…. ரூ.5,000-லிருந்து ரூ.30,000 ஆக உயர்ந்த கட்டணம்… பக்தர்கள் கடும் அதிர்ச்சி….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…

12 minutes ago

“7 வயசுல ஆரம்பிச்ச நரகம்”…. சொந்த மகளை 10 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தை… மொபைலில் இருந்த ‘ChatGPT’ மூலம் சிறுமி செய்த காரியம்.. திகைத்துப்போன போலீசார்….!

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…

19 minutes ago

“அப்பா என்னை கூட்டிட்டு போயிடுப்பா”… 6 வயது சிறுவனின் கடைசி ஆசை…. கோவையில் நடந்த நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…

27 minutes ago

“நாங்க தான் அனுப்பினோம்-னு சொல்றாங்களே”… “இனி எவனாவது தொட்டா சும்மா விடமாட்டோம்”… சட்டமன்றத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய முதலமைச்சர் விஜய்…!

தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…

33 minutes ago

BREAKING: மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி காலமானார்…. திரையுலகையும் தாண்டிய சோகம்…!

தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…

41 minutes ago