“நீண்ட வருட உழைப்பு”.. குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய சிறகடிக்க ஆசை சீரியல் ரோகினி.. வைரலாகும் வீடியோ..!

By Nanthini on ஜனவரி 3, 2025

Spread the love

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் ஆனது ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. TRP-யிலும் இடம் பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் முக்கிய கேரக்டரில்  நடித்து வருகிறார். மேலும் கதாநாயகன் முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் என்பவரும், ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியா என்பவரும் நடித்து வருகிறார்கள். இதில் குறிப்பாக மீனா, ரோகினி, ஸ்ருதி, விஜயா ஆகிய நான்கு கேரக்டர் தான் இந்த சீரியலுக்கு நான்கு தூண்கள் போல இருக்குது என்பது அனைவரும் அறிந்தது.

சிறகடிக்க ஆசை ரோகிணியின் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

   

இந்த நிலையில் இதில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தங்களுடைய உண்மையான குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீரியல் மூலமாக பிரபலமானார் தான் சல்மா அருண். ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் நடிகை சல்மாவின் கணவர் அருண் . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர்களுடைய திருமணம் நடந்தது .

   

சிறகடிக்க ஆசை சீரியல் ரோகிணியின் உண்மையான காதல் கணவர் இவர்தானா.? ஆனாலும் மனோஜ் லெவலுக்கு வரமாட்டார் போல வைரலாகும் புகைப்படம் | tamil360newz

 

இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் சல்மா தனது நீண்ட கால உழைப்புக்கு பிறகு குடும்பத்துடன் சென்று புத்தாண்டில் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். கேக் வெட்டி கொண்டாடிய மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த காரை அவர் வாங்கிய நிலையில் அது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Salma பதிவைப் பகிர்ந்துள்ளார் (@salma.arun_official)