அப்படி ஒரு பாட்டை நான் இயக்கவே மாட்டேன்.. படப்பிடிப்பின் பாதியிலேயே கிளம்பிய இயக்குனர் கே.பாலச்சந்தர்..!

By Nanthini on ஜனவரி 3, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாகக் கொண்டு அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்தவர் தான் கே.பாலசந்தர். இயக்குனர் சிகரம் என்று அனைவராலும் கொண்டாடப்படும் இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் இவர் சினிமாவுக்கு வந்த காலகட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகிய இருவரை அணுகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் சிவாஜி நடிப்பில் ஒரு திரைப்படத்தை மட்டுமே இயக்கி இருந்தார். எதிரொலி என்ற பெயரில் வெளியாகி இருந்த இந்த படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. ஆரம்பத்தில் தன்னுடைய படங்களுக்கு தான் நாடகங்களில் பணியாற்றும்போது நெருங்கிய நட்புடன் இருந்த வி. குமார் என்பவரை இசையமைப்பாளராக பயன்படுத்திக் கொண்டார்.

Vikatan Select - 09 July 2021 - கே.பாலசந்தர் 25 | கே.பாலசந்தர், 25, k. balachander, - Vikatan

   

அதன் பிறகு எம் எஸ் விஸ்வநாதன் உடன் பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 1970 காலகட்டத்தின் இறுதியில் இளையராஜா தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி வரவேற்பு பெற்று வந்த காலகட்டத்திலும் பாலசந்தர் எம்எஸ்சியுடன் பணியாற்றிய பல வெற்றிகளை குவித்தார். அடுத்து சில ஆண்டுகளில் இளையராஜாவுடன் இணைந்து பிறகு அவரை விட்டுப் பிரித்து ஏ ஆர் ரகுமான இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இந்த கூட்டணியில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் டூயட். பிரபு மற்றும் ரமேஷ் அரவிந்த் இணைந்து நடித்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து இயக்கியுள்ளார்.

   

டூயட் - DUET | K Balachander Movies | A.R. Rahman | Superhit Tamil Full  Movie

 

பொதுவாக தன்னுடைய படங்களில் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் பாலசந்தர் சண்டை காட்சிகள் மற்றும் கிண்டல் செய்வது போன்ற பாடல்களை இடம்பெற அனுமதிப்பதில்லை. ஆனால் டூயட் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அவருடைய உதவி இயக்குனர்கள் பாலசந்தரிடம் பல ஆலோசனைகளை கூறியுள்ளனர். நீங்கள் அந்த காலத்தில் எடுத்தது போன்ற படங்களை இப்போது எடுக்க முடியாது இந்த படம் கமர்சியலா வெற்றி பெற வேண்டும் என்றால் சண்டை காட்சிகள் எடுக்க வேண்டும் அதனைப் போலவே கிண்டல் செய்வது போன்ற இந்த பாடல் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பெண்மை போற்றிய பெரும் கலைஞர் கே.பாலச்சந்தர் பிறந்த தின சிறப்புப் பதிவு !

இதில் உடன்பாடு இல்லாத பாலசந்தர் படத்தின் கதைக்கு தேவையான காட்சிகளை மட்டும் படமாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்ப அவருடைய உதவியாளராக இருந்த இயக்குனர் சரண் சண்டை காட்சிகள் மற்றும் கத்திரிக்கா குண்டு கத்திரிக்காய் என்ற கிண்டல் செய்யும் பாடல் காட்சிகளை இயக்கியுள்ளார். அதனைப் போலவே தன்னுடைய படத்தின் பாடல்களில் வரிகளுக்கு முக்கியத்துவம் தரும் பாலசந்தர் இந்த படத்தில் வரும் தங்கமே தமிழுக்கில்லை கட்டுப்பாடு என்ற பாடலை எழுதும்போது கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டதை தொடர்ந்து உங்கள் விருப்பத்திற்கு எழுதுங்கள் என கூறியுள்ளார். அந்த வகையில் வைரமுத்து தனக்கு தோன்றிய வரிகளை அமைத்து எழுதிய பாடல் தான் இது. இந்தப் படமும் பாடலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.