சிறகடிக்க ஆசை தொடரில் நேற்றைய எபிசோடில் பார்வதி ரோகினியை மன்னித்து விடும்படி கூறுகிறார். என் மகன் விட்டு சென்றது போல் மனோஜ் உன்னை விட்டு சென்று விடக்கூடாது நீ அதற்கு இடம் தரக்கூடாது என்று கூறுகிறார். அதிலேயே விஜயாவின் மனம் பாதி மாறிவிட்டது. இதோடு அன்றைய எபிசோடு முடிந்தது.

இன்றைய எபிசோடில் அண்ணாமலை விஜயாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். நீ பண்றது ரொம்ப தப்பு மனோஜ் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. அவனும் சேர்ந்துதானே தப்பு பண்ணி இருக்கான். ஆனா நீ ரோகினியை மட்டும் குற்றம் சொல்லிட்டு தண்டிக்க கூடாது சின்ன விஷயத்தை சின்னதா இருக்கும் போதே பேசி தீத்திடனும் என்று கூறி கொண்டிருக்கிறார்.
மறுபுறத்தில் ரோகினி வித்யா வீட்டிற்கு சென்று அழுது கொண்டு இருக்கிறார். வித்யா சமாதானம் படுத்துகிறார். நீ இப்படி இந்த பண விஷயத்துல மாட்டுவனு எதிர்பார்க்கல ரோகினி என்று கூறிவிட்டு அதற்கு அடுத்ததாக அவர் கேட்ட நச்சென்ற கேள்விகளால் ரோகிணியே கலங்கிவிட்டார். ஆனாலும் மனோஜ் உன்னை இப்படி கழட்டி விட்டுட்டாரு பாரு இந்த ஒரு உண்மை தெரிஞ்சதுக்கே உன்னை இப்படி பண்ணிட்டாங்க நாளைக்கு உன்னை பத்தி மொத்தம் உண்மையையும் தெரிஞ்சுதுனா என்ன ஆகும் இப்பவே அம்மா பேச்சை கேட்கிறார் மனோஜ் நாளைக்கு ரோகினி உன் வாழ்க்கைல வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டாங்க உன்னை விட்ருவாரா இதெல்லாம் ரொம்ப தப்பு என்று அவர் கேட்ட கேள்விகளால் ரோகிணி கொஞ்சம் கலங்கிவிட்டார்.
அடுத்ததாக வீட்டிற்கு மனோஜ் வருகிறார். அப்போது ரோகிணிக்கு போன் செய்து வரச்சொல் என்று கூறுகிறார் விஜயா. உடனே ரோகிணிக்கு மனோஜ் போன் செய்கிறார். ஆனால் ரோகினி போன் எடுக்கவே இல்லை. வித்யாவிற்கு போன் அடித்துக் கொண்டே இருக்கிறார். அப்போது போனை எடுத்த வித்யா, ரோகிணி இங்க வரேன்னு சொன்னா ஆனா இன்னும் வரல என்று பேசுகிறார். அடுத்ததாக மனோஜ் அம்மா வீட்டுக்கு ரோகினியை வர சொன்னாங்க பேசணும் சொன்னாங்க நீ வந்தா வர சொல்லுன்னு சொல்லிட்டு மனோஜ் வைத்து விடுகிறார்.

பிறகு ரோகினி வீட்டுக்கு செல்கிறார். அப்போது மறுபடியும் மனோஜும் ரோகிணியும் மன்னிப்பு கேட்கின்றனர். அண்ணாமலை இனிமேல் இந்த மாதிரி தப்பு செய்யாதீங்க என்று கூறுகிறார். நாளை முத்து ஒரு கலகம் செய்ய திட்டமிடுகிறார். அடுத்ததாக விஜயா காலில் விழுந்து இருவரும் மன்னிப்பு கேட்கின்றனர். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
