ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லி டா… இசையமைக்கிறதை விட்டுட்டு BB Review கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர்..!

By Soundarya on ஜனவரி 3, 2025

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் போட்டி போட்ட நிலையில் அதில் 14 போட்டியாளர்கள் எவிக்ஷன் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளன.இன்னும் பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

   

தற்போது பினாலே டாஸ்க் நடந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.  நிகழ்ச்சி முடிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதனால் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.

   

 

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சோஷியல் மீடியாக்களில் பலரும் ரிவியூ கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் ரிவியூ கொடுத்து வருகிறார். சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள் திறமையைக் காட்டிலும் அனைத்திலும் சாதித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் ஜேம்ஸ் வசந்தன். மெல்லிசைக் குழு நடத்துனராக, இசைப் பயிற்சியாளராக, தமிழ் ஆர்வலராக, நிகழ்த்தித் தொகுப்பாளராக, இசையமைப்பாளராக, பாடல் ஆசிரியாக, இயக்குனராக பல முகங்கள் கொண்டவர் ஜேம்ஸ் வசந்தன்.

இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்ற கனவோடு சென்னை வந்த ஜேம்ஸ் வசந்தன் முதலில் இசை நிகழ்ச்சி தொகுப்பாளராக சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் டாப் 10 மூவிஸ் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவியூ கொடுத்து வருகிறார்.