SIR பணிகளை புறக்கணித்து தமிழகத்தில் நவம்பர் 18 நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வருவாய்த்துறை உள்ளிட்ட சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நாளை பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மருத்துவ விடுப்பை தவிர்த்து வேறு எதற்காகவும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
