தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டதால் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பருவ மழை தீவிரமடைந்து இருப்பதால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீட்டில் மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். உடைந்த ஸ்விட்ச், விளக்குகளை உடனே அகற்ற வேண்டும். எர்த் பை பை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். மின் கம்பிகளுக்கு அருகே உள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
