தென்னிந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் கங்குவா. கிட்டத்தட்ட இரண்டு வருட போராட்டத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பு இருந்தது. படக்குழுவினரும் மலேசியா வரை ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ஈடுபட்டு ஓவர் பில்டப் செய்து வந்தனர். ஆனால் கங்குவா வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரத் தொடங்கியது. பலரும் பலவிதமாக விமர்சித்தனர். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ் மற்றும் ட்ரோல் போன்றவை வைரலாகியது. கங்குவா படத்தை போட்டு இணையத்தில் வறுத்தெடுத்து வருகிறார்கள். இப்படியான நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகா நேற்று கங்குவா திரைப்படம் பற்றியும் சூர்யா பற்றியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

அவருக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இப்படியான நிலையில் பிரபல பாடகி சுசித்ரா நடிகை ஜோதிகா முன்வைத்த கருத்தை தொடர்ந்து அவருக்காகவே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூர்யா ஜோதிகாவை நேரடியாக தாக்கி அவர் பேசியுள்ள விஷயங்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது கங்குவா திரைப்படத்தின் முதல் அரை மணி நேரம் வொர்க் அவுட் ஆகவில்லை என்று ஜோதிகா நேற்று கூறியிருந்த நிலையில், அப்படி என்றால் நாங்கள் அரை மணி நேரம் கழித்து தான் தியேட்டருக்கு வர வேண்டுமா என்று சுசித்ரா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஜோதிகா திரைப்படத்தின் குறைகளை சுட்டிக்காட்டுவது போலவே குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இது ஒரு பிட்சி காஸிப்பிங் சேசன். கண்ணா பின்னான்னு கெட்ட வார்த்தை பறக்க போகிறது. சூர்யா நீ ஒரு மக்கு மட சாம்பிராணின்னு தெரியாம போச்சு. நீ என்னத்த கல்யாணம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்க. வாட் இஸ் திஸ் நான்சென்ஸ் அபௌட் ஷி போஸ்டட் கங்குவா? அந்தப் படம் இறங்குனது போதாது என்று இந்த அம்மணி அவங்க பங்குக்கு இறக்குறாங்க. ஒரு தப்பான படம் சூர்யாவை நடிகன் இல்லை என்று சொல்ல முடியாது. சூர்யாவை நடிகன் என்று சொன்னது பிதாமகன் திரைப்படம் தான். பொண்டாட்டின்னு சொல்லி என்ன மாதிரியான விஷயங்களை பேசி இருக்கு இந்த பொம்பள? இங்கிலீஷ் தெரிஞ்சா எழுதனும் அல்லது வேறு யாரையாவது வச்சி எழுத சொல்லணும்.

இங்கிலீஷ் தெரியலன்னு முதல்ல ஒத்துக்கணும். எனக்கு சூர்யா மேல தான் கோபம். எப்போ பாரு எப்ப பார்த்தாலும் சூர்யா ஜோதிகா சூர்யா ஜோதிகா சொல்லிட்டு இருக்கீங்க. இவங்க என்ன மாற்றான் பிரதர் சிஸ்டர்? சூர்யா தனி ஜோதிகா தனி. நீங்க பொண்டாட்டி தானே? யார் பக்கம் பேசுறீங்க. இந்த அம்மணிக்கு பேரழகன் பிச்சைக்காரி, மக்கள்கிட்ட பிச்சை கேட்குது. எப்படி ரோப் வாக்கிங் பிச்சைக்காரிய சூர்யா கட்டினார் என பல இடங்களில் மிக அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி ஜோதிகாவை பேசி சுசித்ரா வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
