அவர்கிட்ட போனா 2 வருஷம் ஆகும் ஒரு படத்துக்கு.. அப்புறமா நான் பிச்சை எடுக்க வேண்டியது தான்.. ஒரே போடாய் போட்ட பாவா லக்ஷ்மணன்..!

By Nanthini on கார்த்திகை 18, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் பாவா  லட்சுமணன். வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான காமெடிகளில் நடித்து கலக்கி இருப்பார். கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றன. பெரும்பாலும் இவர் வடிவேலு காம்பினேஷனில் பல திரைப்படங்களில் நடித்திருப்பார். தமிழ் சினிமா உலகில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிக்கவில்லை.

அம்மாவுக்கு ஒரு புடவை கூட வாங்கி தரல..மதுக்கு அடிமையாக இருந்தேன்.. பாவா  லட்சுமணனின் கண்ணீர் பேட்டி! | Comedy actor Bava Lakshmanan emotional  interview - Tamil Filmibeat

   

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர் பொருளாதாரம் நெருக்கடியிலும் உள்ள நிலையில் தனது நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு நடிகர் ஜீவா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் பண உதவி கொடுத்து உதவி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் கடவுள் படத்தில் கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்திற்கு என்னை தான் தேடினார்கள்.

   

தயாரிப்பாளரை ஊசிமுனை மேல் நிற்க வைத்த பாலா!.. 'நான் கடவுள்' படப்பிடிப்பில்  தன் வில்லத்தனத்தை காட்டிய சம்பவம்.. - CineReporters

 

ஆனா நான் எஸ்கேப் ஆயிட்டேன். ஏனென்றால் பாலா சார் கிட்ட போனா உண்மையிலேயே இரண்டு வருஷம் ஆகும். அதுக்கப்புறம் நிஜத்திலும் நான் கையில பிச்சை பாத்திரம் தான் ஏந்த வேண்டும். சரியா காசும் தர மாட்டாங்க. அந்தப் படத்துல கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் ஆளை தூக்கிக்கிட்டு மலை மேல ஏற வேண்டிய சீன் எல்லாம் இருந்துச்சு. அதெல்லாம் நம்மளால பண்ண முடியாது. அது மட்டும் அல்லாமல் யாராவது சரியா நடிக்கலனா பாலா குச்சு வச்சு அடிப்பாரு. அந்த மாதிரி டார்ச்சர் பண்றவர் கிட்ட நம்மளால நடிக்க முடியாது என்று இயக்குனர் பாலா பற்றி பாவா லட்சுமணன் வெளிப்படையாக பேசியுள்ளார்.