தற்போது சினிமா வட்டாரமே பேசப்பட்டு வரும் ஒரே செய்தி நயன்தாரா தனுஷ் விவகாரம் தான். தனுஷின் மீது நயன்தாரா NOC certificate தரவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தார். ஆரம்பத்தில் நயன்தாராவுக்கு எல்லோரும் ஆதரவு தெரிவித்தாலும் போகப்போக தனுஷ் மீது தவறில்லை என்று அவர் பக்கம் சாயத்தொடங்கினர்.

ஏனென்றால் ஒவ்வொருவராக வெளிவந்து விக்னேஷ் சிவனின் சதி வேலையை வெளிச்சத்திற்கு போட்டு காட்டினர். இந்த விவகாரத்தை பற்றி ஒவ்வொரு பிரபலமும் தங்களது கருத்துக்களை வைத்து வருகின்றனர். இதில் மிக முக்கியமானவர் பயில்வான் ரங்கநாதன்.
பயில்வான் ரங்கநாதன் எந்த ஒரு விஷயம் என்றாலும் சர்ச்சையாக தான் பேசுவார். சினிமாவில் நடக்கும் உண்மைகளை நான் அப்படியே கூறுகிறேன் என்று கூறுவார். ஒரு சிலவை அவர் சொல்வது உண்மையாக இருக்கும். ஒரு சிலவை நம்ப முடியாதது போல் இருக்கும். அதேபோல் நயன்தாரா தனுஷ் விகாரத்தை பற்றி பேசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். இதில் தனுசுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
இதனால் நயன்தாரா தரப்பில் இருந்து பயில்வான் ரங்கநாதனுக்கு மிரட்டல் விடுத்திருக்கின்றனர். அவர் பேசிய வீடியோவை உடனே நீக்கும்படி கூறியிருக்கின்றார்கள். இதனால் கோபம் அடைந்த பயில்வான் ரங்கநாதன் இன்று அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக மற்றொரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் உண்மையத்தான் பேசினேன். உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் நீங்கள் ஏன் கோபப்பட வேண்டும். நான் சாபம் விடுகிறேன் என்று நீங்கள் சொல்கிறீர்களா நீங்கள் தர்ம பத்தினியா நீங்கள் எத்தனை பேரை காதலித்து விட்டு தற்போது விக்னேஷ் சிவனை திருமணம் முடித்து இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு மறந்து போய்விட்டதா என்னை மிரட்டுவதால் இங்கு ஒன்னும் நடக்கப் போவதில்லை நியாயம் தான் என்றைக்கும் ஜெயிக்கும் உண்மை ஒருநாள் வெளிவரும் என்று அதிரடியாக பதில் அளித்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
