அவரால குழந்தை பெத்துக்க முடியாது.. என்கிட்ட ரிப்போர்ட் இருக்கு.. முதல் வருஷத்துல நான் டைவர்ஸ் கேட்டேன்.. பகிர் கிளப்பும் பாடகி சுசித்ரா

By Mahalakshmi on மே 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு தமிழ் சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சூரியன் எப்எம் நிகழ்ச்சியில் ஆர்ஜேவாக இருந்த பின்னர் பிரபலமானவர்தான் பாடகி சுசித்ரா. மன்மதன் படத்தில் என் ஆசை மைதிலியே பாடலின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார்.

   

ஒரு காலத்தில் நம்பர் ஒன் பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா, யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்தவர் கார்த்திக் குமார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சுச்சி லீக்ஸ் விவகாரம் தான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இவர்களின் வாழ்க்கையை திருப்பி போட்டது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

   

அந்த சமயத்தில் தனுஷ் பெயர் கூட இதில் அடிபட்டு சில புகைப்படங்களும் கசிந்தது. பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் ரகசிய வாழ்க்கை குறித்த வீடியோக்களும் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களைப் பற்றி பேசி இருக்கின்றார் சுசித்ரா. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: “திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் எங்களுக்கு குழந்தை இல்லாததால் மருத்துவரிடம் சென்றோம்.

 

அப்போது எங்களை பரிசோதித்த மருத்துவர்கள் உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் உங்கள் கணவருக்கு இல்லை என்று கூறிவிட்டனர். அப்போது இருந்து தனது விவாகரத்து வேண்டும் என்று போராடி வந்தேன். ஆனால் எப்படியோ பல வருடங்கள் ஓடிவிட்டது. எங்களது திருமணம் காதல் திருமணம் கிடையாது. நான் தற்போது செய்துள்ள திருமணம் தான் காதல் திருமணம்.

நான் இப்போது எனது சிறு வயது நண்பனை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இதுதான் உண்மையான காதல். அது மட்டும் இல்லாமல் என்னை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி வந்தார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது. கார்த்திக் ஒரு ஓரின சேர்க்கையாளராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது.

ஏனென்றால் ஒரு நாள் விடிய காலை 3 மணிக்கு நடிகர் தனுஷும் என்னுடைய கணவர் கார்த்திக்கும் ஒரே அறையில் என்ன செய்து கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இது குறித்து பதில் அளிக்க வேண்டும். தனுஷை மட்டும் நேரில் பார்த்தால் அறைந்து விடுவேன். தனுஷை விட அவரது மனைவி ஐஸ்வர்யா ரொம்ப மோசம்” என்று பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் அமைந்துள்ளனர்.